Saturday, May 31, 2014

இயற்கை முறைக்கு மாறுவோம்! ஆரோக்கியமாக வாழ்வோம்!

தினசரி பயன்படுத்தும் குறிப்புகள் :-
+++++++++++++++++++++++++++++

தினசரி இரவில் படுக்கும் முன் செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் தொற்று நோய் நம்மை அனுகாது. உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.

தினசரி கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் இரத்த சோகையில் இருந்து விடுபடலாம்.

தினசரி காலை அல்லது இரவு இட்டிலியை உணவாகக் கொண்டால் நீரிழிவு நோய் குணமாகும். இட்லியில் உள்ள உளுந்து சர்க்கரை நோயை குணப்படுத்தும் தன்மை கொண்டது.

இடுப்புவலி, மூட்டுவலிக்கு மருந்து கோதுமையை பொன்னிறமாக வறுத்து எடுத்து இடித்து சலித்து பாட்டிலில் வைத்துக் கொண்டு தினசரி சிறிது மாவை எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து மாவை பிசைந்து சாப்பிட்டு வர குணமாகும்.

எலும்பு பற்கள் உறுதியாய் இருக்க ஒருநாள் விட்டு ஒருநாள் அதிகாலை வெறும் வயிற்றில் மாதுளம்பழத்தை சாப்பிட்டு வர எலும்பு பற்கள் உறுதியாகும்.

மலச்சிக்கலில் சிரமப்படுவோர் இரவில் மாம்பழத்தைச் சாப்பிட்டு வர மலச்சிக்கல் சரியாகும்.

உடல் பருமன் உள்ளவர்கள் தினசரி உணவில் பப்பாளிக் காயை சேர்த்து வர நாளடைவில் உடல் பருமன் குறையும்.

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தினசரி மூன்று நெல்லிக்காயைச் சாப்பிட்டு வர அதிலிருந்து விடுபடலாம்.

ஞாபக சக்தி பெருக பப்பாளிக் பழத்தை தினசரி சிறு அளவு சாப்பிட்டுவர ஞாபக சக்தி பெருகும்.

அன்னாசி பழத்தை தினசரி சாப்பிட்டு வர வயிற்றில் உள்ள பூச்சிகள் ஒழியும்.

மணத்தக்காளிக் கீரையும், வெங்காயத்தையும், தினசரி உணவில் சேர்த்துக் வந்தால் மூலச்சூட்டைத் தவிர்க்கலாம்.

தினசரி பேரீச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்பட்டு வரும்.

இயற்கை முறைக்கு மாறுவோம்! ஆரோக்கியமாக வாழ்வோம்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இந்த பதிவை உங்கள் நண்பர்கள் உறவினகள் அனைவரிடமும்
பகிர்ந்து கொள்ளுங்கள் !! விழிப்புணர்வு செய்யுங்கள் !!! நன்றி...




பொது நலம் கருதி வெளியிடுவோர்:-

கடலூர் அரங்கநாதன்...

Thursday, May 29, 2014

கருப்பட்டி கருப்பட்டித் தான்......


ஆரோக்கியம் தரும் கருப்பட்டி...
உடல் ஆரோக்கியம் பெற கருப்பட்டியை பயன்படுத்துவோம்..

கிராமங்களில் எப்போதுமே கருப்பட்டி காபி என்றால் எக்ஸ்டிரா ஸ்பெஷல்தான். பதநீரை காய்ச்சி அதிலிருந்து பெறப்படும் கருப்பட்டிக்கு சுவை, மணம் இருப்பதோடு மட்டுமல்லாமல், மருத்துவ குணமும் அதிகம் இருக்கிறது. கருப்பட்டியை இனிப்புக்காக மட்டும் பயன்படுத்த வில்லை. ஏனெனில் இதில் இருக்கும் கூடுதலான மருத்துவத் தன்மை யின் காரணமாக இதை இன்றும் கிராமங்களில் பயன்படுத்து கின்றனர்.
இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் கருப்பட்டி யானது நமது உடலை சுத்தப்படுத்தி செரிமானத்திற்கும் பணிபுரிகிறது. பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால் இடுப்பு எலும்புகள் வலுப்பெறுவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும். ரத்த சோகைக்கு தீர்வு, கண் பார்வைக்கும் மிக மிக நல்லது...
மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலியை போக்க கருப்பட்டி சாப்பிடலாம். சீரகத்தை வறுத்து சுக்கு மற்றும் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும்.
ஓமத்தை கருப் பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுத் தொல்லை நீங்கும். குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித் தொல்லை நீங்கும்.
ஆண்மையை வீரியப்படுத்துவதிலும் கருப்பட்டிக்கு தனிப்பங்கு உண்டு. காபியில் சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக் குடித்தால் உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது.
சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால்.
சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும். உடலுக்கு தேவையான ஆற்றலை தரக்கூடிய உணவாக கருப்பட்டி கருதப்படுகிறது.
இதை சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம். கருப்பட்டியை நாள்தோறும் சர்க்கரைக்கு பதிலாக அனைவரும் பயன்படுத்தினால் உடலின் ஆரோக்கியம் மேம்படும்.

Saturday, May 24, 2014

வெங்காயம்






வெங்காயம் - பாதம் வைத்தியம்

Raw ONION on bottom of the feet to take away illness.
நறுக்கிய வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைத்து உடல் சோர்வு போக்கலாம்...

வெங்காயம் நச்சுக்களை உறிஞ்சும் தன்மை உடையது.
இங்கிலாந்தில் பிளேக் நோய் வந்த போது, காற்றில் இருக்கும் நச்சுக்களை எடுக்கவும்...அந்த நோயிலிருந்து விடுபடவும் வெங்காயத்தை அதிகம் உபயோகின்தனர்.

NEVER SAVE AN ONION. It will absorb all the toxins in the air of your refrigerator.
வெங்காயத்தை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து உபயோகிக்கதிர்கள். அதில் உள்ள அனைத்து நட்சுக்களையும் வெங்காயம் உறிஞ்சிக்கொள்ளும்.
மேலும் அதனை நீங்கள் உட்கொண்டால் நச்சுக்களை உண்பதற்கு சமம்.

நறுக்கிய வெங்காயத்தை நீங்கள் படுக்கும் படுக்கையை சுற்றிலும் வைத்துக்கொண்டால் இரவு உறக்கம் மற்றும் சுவாசிக்கும் காற்று சுத்தமானதாக இருக்கும். உடல் நலம் இல்லாதவர்கள் விரைவில் குணமடைவார்கள்.

வெங்காயம் மற்றும் வெள்ளைபூண்டு ஒரு சிறந்த நுண்ணுயிர் கொல்லியாகவும், பாக்டீரியா எதிர்ப்பாகவும் செயல்படுகிறது.

நறுக்கிய வெங்காயத்தை உங்கள் பாதத்தின் அடியில் மற்றும் நடுவினில் வைத்து படுத்து தூங்கும்போது அதன் செயல் நேரடியாக நமது உடம்பில் வினை புரியும். உங்கள் இரத்தத்தை நன்கு சுத்தம் செய்யும் மற்றும் உங்கள் வயற்றில் இருக்கும் நட்சுக்களையும் உறிஞ்சிவிடும்.

வெள்ளைபூண்டயும் இது போல் உபயோகிக்கலாம்.

வயிற்று வலியின் காரணிகள்....



வயிறு ஒரு கோணிபை மாதிரி.. அதுக்குள்ள கிட்னி, ஈரல், கல்லீரல், மண்ணீரல், உணவுப்பை, பெருங்குடல், சிறுகுடல், மலக்குடல், கனையம், சிறு நீர்பை, கர்ப்பப்பை/விந்துபை/சினைப்பை' ன்னு அவ்வளவு உறுப்புகள் இருக்கு...

வயிறு வலிக்குதுன்னு சொன்னா எந்த உறுப்புல பிரச்சனைன்னு புரிஞ்சிக்கிறது ஒரு டாக்டர்க்கே கஷ்டம்... சிம்பிளா ட்ரை பண்ணிருக்கேன்...

வயிறை மேலிருந்து கீழ் மூன்று பகுதியாவும் இடமிருந்து வலமாக மூன்று பகுதியாவும் பிரிச்சிக்கலாம் அப்படியே படுக்க வைச்சு கோடு கிழிச்சா மொத்தம் 9 பகுதிகள்.

அதாவது மேல், நடு(தொப்புள் பகுதி) மற்றும் அடி பகுதி, இடது, நடு(தொப்புள் பகுதி) மற்றும் வலது பகுதி...

மேல்வயிறு வலது மூலையில வலிச்சா.. ஈரலில் பிரச்சனை.. பித்தப்பை கல்.

மேல்வயிறு இடது மூலை மற்றும் நடுவில் வலித்தால் அல்சர்.

நடுவயிறு வலது மற்றும் இடது மூலையில் வலி மற்றும் நீர்கடுப்பு இருந்தால் கிட்னி கல்.

நடுவயிறு நடுவில் (தொப்புளை சுற்றி) வலித்தால் ஃபூட் பாய்சன்.

அடிவயிறு வலது மூலை - அப்பன்டிசைடிஸ்,

அடி வயிறு நடுவில், சிறுநீர் பை வீக்கம், கர்ப்பப்பை பிரச்சனைகள்,

அடிவயிறு இடது மூலையில் வலித்தால் குடலிறக்கம்.

ஓரளவாவது புரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன்... என்ன பிரச்சனைன்னு தெரிஞ்சிட்டு மருத்துவரைப் பாருங்க.

உங்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலிருக்கலாம் anyway share பண்ணுக......!

நன்றி Jayant Prabhaka

Sunday, May 18, 2014

உயிர் கொல்லும் புற்று நோயினை கொன்றிட மற்றுமோர் அடியாள்...

புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க
வெறும் நூறு ரூபாயில் புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து !

புற்று நோயால் பாதிக்கப் படுகிறார்களாம். சொந்த செலவிலேயே சூனியம் வைக்கறதுக்கு சமம். சொன்னா யார் கேட்கப்போறா !?

புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் , சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை , வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டுபிடித்து , குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த வேதனை , ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும்.

எனக்கு தெரிந்து , மிக நெருக்கமான வட்டத்தில் – மூன்று பேரை , அவர்கள் ஒட்டு மொத்த சொத்தையும் செலவழித்துப் பார்த்தும், உயிரையே காவு வாங்கி விட்டது.

அதை விட கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் கண் முன்னே நான் பார்த்ததில்லை.

அப்படிப்பட்ட புற்று நோயை , படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது.

இந்த சிகிச்சையை கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர்.

இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர். .

இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம் .இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்று கற்றாழை ஆகும் .
சோற்று கற்றாழை 400 கிராம்
சுத்தமான தேன் 500 கிராம்
whisky(or)brandy 50 மில்லி (மருந்தாக மட்டும் பயன்படுத்துக)
தயாரிப்பு முறை
சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும்
தோலை நீக்கிவிடக்கூடாது
தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும் அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும்

நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும்
இப்போது மருந்து தயாராகி விட்டது

மருந்தை உட்கொள்ளும் விதம்
இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் உண்ணவேண்டும் .ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும. மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ணவேண்டும. பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய கூடாது.
இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ளவேண்டும் .சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது .
இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும் . மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது .

உங்களால் முடிந்தவரை உங்கள் நட்பு வட்டாரத்தில் இதை தெரியப்படுத்துங்கள். யாரோ ஒருவருக்கு இது மிக தேவையானதாக இருக்க கூடும்… ! சிகரெட் பிடிக்கும் அனைவரும் உடனடியாக , புகை பழக்கத்தை நிறுத்தி , இந்த மருந்தை உட்கொள்ள ஆரம்பித்தல் நல்லது.ஒரே ஒரு நிமிஷம் , உங்களுக்கு புற்று நோய் வந்துடுச்சுனு டாக்டர் சொல்றதா நினைச்சுக்கோங்க.. கண் முன்னாலே உங்க மனைவி, குழந்தைகள், வயசான அப்பா , அம்மா எல்லோரும், நீங்க இல்லாம – கஷ்டப்படப் போறதை நினைச்சுப் பாருங்க… அந்த கருமத்தை , இதுக்கு மேலே தொடுவீங்க !?



நாம மனசு வைச்ச எல்லாம் முடியும்!...

உண்மையை உணருங்கள், மற்றவருக்கும்... பகிருங்கள்....

***********************************************
எங்களின் பக்கம் பிடித்திருந்தால், LIKE செய்ய Tamil-Oodagam கிளிக் அழுத்தவும்.......
***********************************************

தமிழில் உள்ள ஓரெழுத்து சொற்கள் நாற்பத்திரண்டு....

தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம்

அ -----> எட்டு
ஆ -----> பசு
ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி
உ -----> சிவன்
ஊ -----> தசை, இறைச்சி
ஏ -----> அம்பு
ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை
கா -----> சோலை, காத்தல்
கூ -----> பூமி, கூவுதல்
கை -----> கரம், உறுப்பு
கோ -----> அரசன், தலைவன், இறைவன்
சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்
சீ -----> இகழ்ச்சி, திருமகள்
சே -----> எருது, அழிஞ்சில் மரம்
சோ -----> மதில்
தா -----> கொடு, கேட்பது
தீ -----> நெருப்பு
து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
தூ -----> வெண்மை, தூய்மை
தே -----> நாயகன், தெய்வம்
தை -----> மாதம்
நா -----> நாக்கு
நீ -----> நின்னை
நே -----> அன்பு, நேயம்
நை -----> வருந்து, நைதல்
நொ -----> நொண்டி, துன்பம்
நோ -----> நோவு, வருத்தம்
நௌ -----> மரக்கலம்
பா -----> பாட்டு, நிழல், அழகு
பூ -----> மலர்
பே -----> மேகம், நுரை, அழகு
பை -----> பாம்புப் படம், பசுமை, உறை
போ -----> செல்
மா -----> மாமரம், பெரிய, விலங்கு
மீ -----> ஆகாயம், மேலே, உயரம்
மு -----> மூப்பு
மூ -----> மூன்று
மே -----> மேன்மை, மேல்
மை -----> அஞ்சனம், கண்மை, இருள்
மோ -----> முகர்தல், மோதல்
யா -----> அகலம், மரம்
வா -----> அழைத்தல்
வீ -----> பறவை, பூ, அழகு
வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்
வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்த....

உண்மையை உணருங்கள், மற்றவருக்கும்... பகிருங்கள்....

***********************************************
எங்களின் பக்கம் பிடித்திருந்தால், LIKE செய்ய Tamil-Oodagam கிளிக் அழுத்தவும்.......
***********************************************

சில ஆச்சரியமான உண்மைகள்

சில ஆச்சரியமான உண்மைகள்

* கிளியின் அறிவு 5 வயது குழந்தைக்கு ஒப்பானது!
* 5 மணி நேரத்தில் 150 கப் காபி குடித்தால் மரணம் ஏற்படும் அபாயம் உண்டு.
* காகங்கள் தங்களை தொந்தரவு செய்யும் மனித முகங்களை நினைவு வைத்துக் கொள்ளும்!
* மேன்டிஸ் பூச்சியினால் அதன் தலையை அனைத்துப் பக்கங்களிலும் திருப்ப முடியும் - ‘எந்திரன்’ சிட்டி போல!
* உலக மக்கள் தொகையில் 10% பேர் இடக்கை பழக்கம் உடையவர்கள்.
* காண்டாமிருகத்தின் பால் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.