Thursday, February 12, 2015

இயற்கையுடன் இணைந்து வாழும் மிருகங்களை அதன் போக்கில் வளரவிடுவதே ஆரோக்கியமானது



ஒருமுறை காட்டுக்குள் போகும் போது அங்கிருந்த குரங்குகள் தின்பதற்கு பழங்கள் கொடுத்தோம்.

அழைத்துச் சென்ற வனத்துறை அதிகாரி, "குரங்களுக்கு மனிதர்கள் இப்படிப் பழங்கள் கொடுத்துப் பழக்குவது தவறானது"- என்றார்... ஆச்சர்யமாய் இருந்தது.. விலங்குகளுக்கு உணவிடுவது நல்லதுதானே என்று கேட்டேன்...

"சுற்றிப்பார்ப்பதற்காக வரும் மனிதர்கள் ஒரு பிரியத்தில்தான் குரங்குகளுக்கு உணவிடுகிறார்கள்.

ஆனால் தினமும் இப்படியே இந்தக் குரங்குகளுக்கு உணவு கிடைத்து விடுவதால் இந்தக் குரங்குகள் கஷ்டப்பட்டு உணவு தேடுவது, மரங்களின் மேல் ஏறி பழங்கள் பறிப்பது போன்ற பழக்கங்களை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கைவிட்டுக் கொண்டிருக்கின்றன...

இப்படியே போவதால் ஒரு நாள் முற்றிலும் அந்தப்பயிற்சி இல்லாமலேயே புதிய தலைமுறைக்குரங்குகள் மாறி விடுகின்றன...

வரிசையில் உட்காந்து பிச்சை எடுப்பது போல இந்தக் குரங்குகளும் டூரிஸ்ட்களிடம் பிச்சைஎடுக்கும் ஜீவங்களாக மாறிவிடுகின்றன...

எனவே இயற்கையுடன் இணைந்து வாழும் மிருகங்களை அதன் போக்கில் வளரவிடுவதே ஆரோக்கியமானது"- என்று பதில் சொன்னார்...

நிறைய யோசிக்க வைத்தது!!

-----------------------------------------------நன்றி இளங்கோவன்

ஒரு தந்தையின் கடிதம்....

ஒரு தந்தையின் கடிதம்:
ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்!
தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.
வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள்.
மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள்.
குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும்.
அளவுக்கு அதிகமாய் இனிமையாகப் பேசுபவர்களிடம் அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை அவன் துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள்.
இதை எழுதிய தந்தை ஆப்ரஹாம் லிங்கன்.

தனி மனிதன் திருந்தினால் தான், நாடு திருந்தும்...

நம் நாட்டை பின்னுக்கு தள்ளும் விஷயங்கள்...

1.சாலையில் எச்சில் துப்புதல். கண்ட கண்ட இடத்தில் சிறுநீர் கழித்தல்.{இதில் கண்டிப்பாக பெரும்பாலானோருக்கு பங்கு உண்டு.

2.சிக்னலை மீறுவது, தவறான பாதையில் ஓட்டுவது :{இது இந்தியாவை பொறுத்தவரை மிக சர்வ சாதாரணமான விஷயம் ஆகிவிட்டது. இவற்றை தடுக்க கண்டிப்பாக மாற்றம் வர வேண்டும். தேவையில்லாமல் ஒலி எழுப்புவதுமே தவறான ஒன்று. போக்குவரத்து நெரிசல் தான் இங்கே மோசமான ஒன்று.

3.குப்பைகளை கொட்டுவது :{நம்மவர்களுக்குஅழகான இடத்தை பார்த்தாலே குப்பை கொட்ட தோன்றுகிறது. இதற்கு படித்தவர் படிக்காதவர் என்ற பாகுபாடே இல்லை. இதனாலே பல கலைகளையும், நிலைகளையும் இழந்து நிற்கிறோம்.

4.வரிசையை முந்தியடித்தல் :{இந்த இடத்தில வீரத்தை சிலர் தப்பாக புரிந்துவிட்டனர் போலும். எதற்கு எடுத்தாலும் அவசரம். பொறுமை என்பது எள்ளளவும் இங்கே இல்லை. நிற்கிற ஒருவனும் முன்னும் பின்னுமாய் தள்ளிக்கொண்டு தான் நிற்கிறான்.

5.விட்டு கொடுக்காத பழக்கம் :{அனைத்திற்கும் விட்டுகொடுக்க சொல்லவில்லை, சில காரணங்களுக்கு மட்டும் கூட இங்கே இறங்க மறுக்கின்றனர். ஒரு பொது மின்தூக்கியில் ஒரே முறையில் முன்னூறு பேர் ஏற நினைத்தால் அது எப்படி...? அவசர ஊர்தி கூட சாலைகளில் வழிக்காக பிச்சை எடுக்கின்றன.

6.நடுத்தர நிலையை ஏற்றுகொள்வது :நடுத்தர நிலையில் இருந்து முன்னேற நினைப்பது சரியான விஷயம் தான், ஆனால் அதற்காக இங்கே எவ்வளவு பொய் புரளிகள், பித்தலாட்டங்கள், லஞ்சம், ஊழல், Etc... Etc.... Etc.....இங்கே சகிப்புத்தன்மை தண்ணீரில் கரையும் உப்பு தான்.இங்கே உண்மை தொண்டனாய் இருக்க யாருக்கும் ஆசை இல்லை, தலைவன் பதவிக்கே முந்தியடிகின்றனர்.

7.மனிதனை மனிதன் மதிப்பது இல்லை:{முன்னுக்கு வருபவனை அழிக்க மட்டுமே நினைப்பது. நம் மக்களை நாமே மதிக்காத போது எப்படி முன்னேற முடியும்.

8.ஜாதி வெறி - மத வெறி – இன வெறி:நம் நாட்டின் சாபக்கேடு என்றே இதனை சொல்லலாம்......!!

தனி மனிதன் திருந்தினால் தான், நாடு திருந்தும். இதை படித்த பிறகு ஓரிருவர் திருந்தினால் கூட போதும்...
இந்த பதிவின் நோக்கம் முழுமை பெரும்..

பெண் குழந்தை இருக்கும் வீடு தேவதைகள் வாழும் வீடு..



ஒரு முறை ஐந்து வயது பெண் குழந்தை தன் அப்பாவின்
மூக்கு கண்ணாடியை தவறுதலாக கீழே போட்டு உடைத்து விட்டது.
அவள் அப்பா அந்த குழந்தையை கடுமையாக திட்டி விட்டார்....
அன்று இரவு முழுவதும் அந்த பெண் தன் அப்பாவுக்காக ஒரு பரிசு தயார் செய்து, அடுத்த நாள் தன் தந்தையிடம்
கொடுத்தாள்.அதை பிரித்து பார்த்த அவர் அதில் ஒன்றும்
இல்லாததை பார்த்து மீண்டும் கோபமுற்றார்.
யாருக்காவது பரிசு கொடுக்கணும்னா அதில் எதாவது பொருள் வைத்து கொடுக்கனும்மா நீ வெறும் பெட்டியை கொடுப்பது தவறு என்று கண்டித்தார்.
அந்த குழந்தை சிரித்து கொண்டே ஆர்வத்துடன் சொன்னது நான் இரவு முழுவதும் 1000 முத்தங்களை அந்த பெட்டிக்குள்ள கொடுத்து, மூடி தான் உங்களிடம் தந்தேன் என்றாள்.
அதைக் கேட்ட அவரது தந்தை அந்த குழந்தையை இறுக்கி அணைத்து மன்னிச்சிக்கோமா உன் அன்பு புரியாமல்
உன்னை திட்டிட்டேன் என்றார்.
அவர் தன் தலையனை அடியில் அந்த பெட்டியை வைத்து கொண்டார்.எப்போது எல்லாம் அவர் மனம் வருத்தமடைகிறதோ அப்போது எல்லாம் தன் மகளின் அன்பு முத்தத்தை அந்த பெட்டியை திறந்து எடுத்து கொண்டார்.
பெண் குழந்தைகள் இருக்கும் வீடு தேவதைகள் வாழும் வீடு..
நன்றி:- John Mark

Vision.....

I am sharing someone's wonderful experience, he recently had in Singapore.

I was invited to one Friday evening event by one of MNC Vendor organization who had organized the event to raise funds for the visually handicapped people in a center for blind people.
As usual, since it was a Friday evening, I first thought to skip the event considering it could be a bit boring and rather spend the evening relaxing by some other means.
But being alone and sometimes finding it difficult to kill time, I thought to accept the invitation and registered on line for booking.
Moreover it was free smile emoticon which was another motivation to go to the event.
I was looking at the event to pass some time, meet few people and nothing else.
When I went there, there were approx 40 people from various industries invited for that event. I found some Indians and naturally talked to them about how life is in Singapore etc etc. Initially we were shown a video about the visually handicapped center. What are their activities, how are they helping blind people in Singapore to lead a more fulfilling life, etc . It was a short 15 minute video and quite inspiring that how people from different walks of life spend time in helping these blind people without expecting anything in return.
They shared the satisfaction and fulfilment they get by helping them.
After the video, we all were gathered in a hall and were briefed about next event. The theme of the next event was "Dining in the Dark".
And this is the event which turned out to be inspiring and worth sharing.
What is meant was that we all 40+ people were going to have Dinner in a pitch Dark room !!!! The next 2 hours were completely planned, organized , directed and executed by three blind youths.
One was a girl ( Leader ) and other two boys were assistant to her forming a team of three blind volunteers.
The blind leader first gave us tips for dining (These were ACTUAL STANDARDS THE BLIND PEOPLE FOLLOW IN ORDER TO MAKE THEIR LIFE EASIER)
1. When you sit at your table the things will be placed as follows :
at 3 o clock of your dish : You will find a spoon.
at 9 o clock : Fork;
12 o clock : spoon.
2 o clock : Empty Glass Dish at the center with Paper napkin tucked at 6 o clock.
2. There will be two large Jugs circulated to you. The Jug with plain walls will have water and the Jug with curved wall will have orange juice.
3. When you get your Jug based on your choice you have to pour it in your glass. You have to dip your forefinger in the glass so that when you fill it and the liquid touches your finger, you have to stop pouring.
She asked whether everyone has understood.
All said yes but everyone was confused and trying to remember what she said and confirming with each other. Next 1 1/2 hours we spent were full of fun and learning. In completely pitch dark room where we could not see ANYTHING we were enjoying various delicious food without seeing it.
We all 40 people were taken in groups in the dark hall.
Each one was directed by blind person till he/she sits on a chair (We were finding it awkward because actually we are supposed to guide blind people to their destination and help them).
We were Served full five course dinner by this team of three blind people-Welcome drinks, appetizers, starters , main course and desserts.
The amazing thing was that the team of three blind people were serving exactly vegetarian dishes to vegetarian people who were sitting randomly in the room!
While registering on line we were asked question to choose from "Vegetarian" or "Non vegetarian". I obviously chose Vegetarian, being one. We were so nicely hosted that we did not have to wait in between serves . As we were ending finishing one dish, we were served with next without any delays.
After approx 1 and half hours of Dining in the dark , the leader asked whether everyone has finished eating. After confirmation she switched on the lights of the dining room.
We left the Dining room with tears in our eyes.
We realized how lucky we are and how we have been gifted with beautiful eyes to see the beautiful world. We realized how difficult lives of blind people are ( and other handicapped) without being able to see.
We realized how uncomfortable we were for just two hours without being able to see anything and how they must be living their lives.
We realized how unfortunate we are , that we do not value such simple things in life we have and cry (sometime louder, sometime within ourselves) and run after what we don't have... for whole of our lives without having time to adore for the things we have.
Be cheerful.
Adore whatever you have in life.
You may try for whatever you don’t have but never feel sad about it.

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சருக்கும், சுவாமி விவேகானந்தருக்கும் நடைபெற்ற உரையாடல்...

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சருக்கும், சுவாமி விவேகானந்தருக்கும் நடைபெற்ற உரையாடல்...
உங்களின் பல சந்தேகங்களுக்கு இதில் தீர்வு ஒளிந்திருக்கக்கூடும். படியுங்கள்…
மீண்டும் மீண்டும் படியுங்கள்…
பல வரிகள் மிக மிக ஆழமான பரந்த பொருளை கொண்டவை.
சுவாமி விவேகானந்தர் : நாம் ஏன் எப்போதும் மகிழ்ச்சியில்லாமல் இருக்கிறோம்?
✅இராமகிருஷ்ண பரமஹம்சர் : துன்பத்தையே நினைத்து கற்பனை செய்துகொண்டிருப்பது உன் வழக்கமாகிவிட்டது. அதனால் உன்னால் மகிழ்ச்சியுடன் இருக்க முடியவில்லை.
சுவாமி விவேகானந்தர் : நல்லவர்களுக்கு மட்டும் எப்போதும் துன்பம் ஏன்?
✅இராமகிருஷ்ண பரமஹம்சர் : உரசாமல் வைரத்தை பட்டை தீட்டமுடியாது. நெருப்பிலிடாமல்தங்கத்தை தூய்மைப்படுத்த முடியாது. நல்லவர்கள் சோதனைக்குள்ளாவார்கள். ஆனால் அவர்கள் பாதிப்புக்குள்ளாகமாட்டார்கள். அந்த சோதனையின் மூலம் அவர்கள் மேன்மையடைவார்களே தவிர கீழே செல்ல மாட்டார்கள். (By experience their life becomes better, not bitter!)
சுவாமி விவேகானந்தர் : அப்போது, சோதனைகள் நன்மைக்கு என்று சொல்கிறீர்களா?
✅இராமகிருஷ்ண பரமஹம்சர் : ஆம். அனுபவத்தை விட பெரிய ஆசிரியர் வேறு யாருமில்லை. அது முதலில் சோதனையை கொடுத்துவிட்டு பிறகு தான் பாடத்தை போதிக்கும்.
சுவாமி விவேகானந்தர் : கணக்கற்ற பிரச்சனைகளில் மூழ்கி தவிப்பதால் நாங்கள் எங்கே போகிறோம் தெரியவில்லை….
✅இராமகிருஷ்ண பரமஹம்சர் : வெளியே பார்த்தால் எங்கே போகிறோம் என்று உனக்கு புரியாது. உனக்குள்ளே பார். புரியும். கண்களால் பார்க்கத் தான் முடியும். ஆனால் உள்ளத்தால் தான் வழியை காட்ட முடியும். (Eyes provide sight. Heart provides the way.)
சுவாமி விவேகானந்தர் : சரியான பாதையில் போகும்போதும் தோல்வி அடிக்கடி ஏற்படுகிறதே?
✅இராமகிருஷ்ண பரமஹம்சர் : செல்லும் பாதையில் வெற்றி என்பது பிறரால் அளக்கப்படுவது. ஆனால் அதில் கிடைக்கும் திருப்தி என்பது உன்னால் உன்னால் மட்டுமே உணரப்படுவது.
சுவாமி விவேகானந்தர் : கடினமான சூழ்நிலைகளில் எப்படி நீங்கள் உற்சாகம் குறையாமல் உத்வேகத்துடன் இருக்கிறீர்கள்?
✅இராமகிருஷ்ண பரமஹம்சர் : எப்பொழுதும், இனிஎப்படி போகப்போகிறோம் என்று அச்சப்படுவதைவிடஇதுவரை நீ எப்படி வந்திருக்கிறாய், எதையெல்லாம் கடந்து வந்திருக்கிறாய்என்று பார். உனக்கு கிடைத்த வரங்களை எண்ணிக்கொள். இழந்தவைகளை அல்ல.
சுவாமி விவேகானந்தர் : இந்த மக்களை நினைத்து நீங்கள் வியக்கும் விஷயம் எது?
✅இராமகிருஷ்ண பரமஹம்சர் : துன்பப்படும்போது “எனக்கு ஏன்? என்னை மட்டும் ஏன்??” என்று கேட்பவர்கள் இன்பத்தின் போது அந்த கேள்வியை கேட்பதில்லை. அதை நினைத்து தான் வியக்கிறேன்.
சுவாமி விவேகானந்தர் : வாழ்க்கையில் மிகச் சிறந்தவைகளை நான் அடைவது எப்படி?
✅இராமகிருஷ்ண பரமஹம்சர் : உன் கடந்த காலத்தை வருத்தமின்றி ஏற்றுக்கொள். நிகழ்காலத்தை நம்பிக்கையோடு கைக்கொள். எதிர்காலத்தை அச்சமின்றி எதிர்நோக்கு. இதுவே வாழ்க்கையில் சிறந்தவைகளை பெற கடைபிடிக்கவேண்டிய நியதி.
சுவாமி விவேகானந்தர் : கடைசியாக ஒரே ஒரு கேள்வி. சில நேரங்களில் என்னுடைய பிரார்த்தனைகளை இறைவன் கேட்கவில்லையோ என்று தோன்றுகிறது.
✅இராமகிருஷ்ண பரமஹம்சர் : கேட்கப்படாத பிரார்த்தனைகள் என்று எதுவுமே இல்லை. (There are no unanswered prayers!) அச்சத்தை விடு. நம்பிக்கை கொள். வாழ்க்கை என்பது தீர்வு காணப்படவேண்டிய ஒரு புதிர் தானே தவிர பிரச்னை அல்ல. எப்படி வாழவேண்டும் என்று மட்டும் நாம் அறிந்து கொண்டால் வாழ்க்கை மிக மிக இனிமையாக மாறிவிடும். என்னை நம்பு. ,

Wednesday, February 11, 2015

ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்!

ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்!/
Let's Spread Aathisudi to the World!

1. அறம் செய விரும்பு /
1. Learn to love virtue.

2. ஆறுவது சினம் /
2. Control anger.

3. இயல்வது கரவேல் /
3. Don't forget Charity.

4. ஈவது விலக்கேல் /
4. Don't prevent philanthropy.

5. உடையது விளம்பேல் /
5. Don't betray confidence.

6. ஊக்கமது கைவிடேல் /
6. Don't forsake motivation.

7. எண் எழுத்து இகழேல் /
7. Don't despise learning.

8. ஏற்பது இகழ்ச்சி /
8. Don't freeload.

9. ஐயம் இட்டு உண் /
9. Feed the hungry and then feast.

10. ஒப்புரவு ஒழுகு /
10. Emulate the great.

11. ஓதுவது ஒழியேல் /
11. Discern the good and learn.

12. ஒளவியம் பேசேல் /
12. Speak no envy.

13. அகம் சுருக்கேல் /
13. Don't shortchange.

14. கண்டொன்று சொல்லேல்/
14. Don't flip-flop.

15. ஙப் போல் வளை /
15. Bend to befriend.

16. சனி நீராடு /
16. Shower regularly.

17. ஞயம்பட உரை /
17. Sweeten your speech.

18. இடம்பட வீடு எடேல் /
18. Judiciously space your home.

19. இணக்கம் அறிந்து இணங்கு /
19. Befriend the best.

20. தந்தை தாய்ப் பேண் /
20. Protect your parents.

21. நன்றி மறவேல் /
21. Don't forget gratitude.

22. பருவத்தே பயிர் செய் /
22. Husbandry has its season.

23. மண் பறித்து உண்ணேல் /
23. Don't land-grab.

24. இயல்பு அலாதன செய்யேல் /
24. Desist demeaning deeds.

25. அரவம் ஆட்டேல் /
25. Don't play with snakes.

26. இலவம் பஞ்சில் துயில் /
26. Cotton bed better for comfort.

27. வஞ்சகம் பேசேல் /
27. Don't sugar-coat words.

28. அழகு அலாதன செய்யேல் /
28. Detest the disorderly.

29. இளமையில் கல் /
29. Learn when young.

30. அரனை மறவேல் /
30. Cherish charity.

31. அனந்தல் ஆடேல் /
31. Over sleeping is obnoxious.

32. கடிவது மற /
32. Constant anger is corrosive.

33. காப்பது விரதம் /
33. Saving lives superior to fasting.

34. கிழமைப்பட வாழ் /
34. Make wealth beneficial.

35. கீழ்மை அகற்று /
35. Distance from the wicked.

36. குணமது கைவிடேல் /
36. Keep all that are useful.

37. கூடிப் பிரியேல் /
37. Don't forsake friends.

38. கெடுப்பது ஒழி /
38. Abandon animosity.

39. கேள்வி முயல் /
39. Learn from the learned.

40. கைவினை கரவேல் /
40. Don't hide knowledge.

41. கொள்ளை விரும்பேல் /
41. Don't swindle.

42. கோதாட்டு ஒழி /
42. Ban all illegal games.

43. கெளவை அகற்று /
43. Don't vilify.

44. சக்கர நெறி நில் /
44. Honor your Lands Constitution.

45. சான்றோர் இனத்து இரு /
45. Associate with the noble.

46. சித்திரம் பேசேல் /
46. Stop being paradoxical.

47. சீர்மை மறவேல் /
47. Remember to be righteous.

48. சுளிக்கச் சொல்லேல் /
48. Don't hurt others feelings.

49. சூது விரும்பேல் /
49. Don't gamble.

50. செய்வன திருந்தச் செய் /
50. Action with perfection.

51. சேரிடம் அறிந்து சேர் /
51. Seek out good friends.

52. சையெனத் திரியேல் /
52. Avoid being insulted.

53. சொற் சோர்வு படேல் /
53. Don't show fatigue in conversation.

54. சோம்பித் திரியேல் /
54. Don't be a lazybones.

55. தக்கோன் எனத் திரி /
55. Be trustworthy.

56. தானமது விரும்பு /
56. Be kind to the unfortunate.

57. திருமாலுக்கு அடிமை செய் /
57. Serve the protector.

58. தீவினை அகற்று /
58. Don't sin.

59. துன்பத்திற்கு இடம் கொடேல் /
59. Don't attract suffering.

60. தூக்கி வினை செய் /
60. Deliberate every action.

61. தெய்வம் இகழேல் /
61. Don't defame the divine.

62. தேசத்தோடு ஒட்டி வாழ் /
62. Live in unison with your countrymen.

63. தையல் சொல் கேளேல் /
63. Don't listen to the designing.

64. தொன்மை மறவேல் /
64. Don't forget your past glory.

65. தோற்பன தொடரேல் /
65. Don't compete if sure of defeat.

66. நன்மை கடைப்பிடி /
66. Adhere to the beneficial.

67. நாடு ஒப்பன செய் /
67. Do nationally agreeables.

68. நிலையில் பிரியேல் /
68. Don't depart from good standing.

69. நீர் விளையாடேல் /
69. Don't jump into a watery grave.

70. நுண்மை நுகரேல் /
70. Don't over snack.

71. நூல் பல கல் /
71. Read variety of materials.

72. நெற்பயிர் விளைவு செய் /
72. Grow your own staple.

73. நேர்பட ஒழுகு /
73. Exhibit good manners always.

74. நைவினை நணுகேல் /
74. Don't involve in destruction.

75. நொய்ய உரையேல் /
75. Don't dabble in sleaze.

76. நோய்க்கு இடம் கொடேல் /
76. Avoid unhealthy lifestyle.

77. பழிப்பன பகரேல் /
77. Speak no vulgarity.

78. பாம்பொடு பழகேல் /
78. Keep away from the vicious.

79. பிழைபடச் சொல்லேல் /
79. Watch out for self incrimination.

80. பீடு பெற நில் /
80. Follow path of honor.

81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் /
81. Protectyour benefactor.

82. பூமி திருத்தி உண் /
82. Cultivate the land and feed.

83. பெரியாரைத் துணைக் கொள் /
83. Seek help from the old and wise.

84. பேதைமை அகற்று /
84. Eradicate ignorance.

85. பையலோடு இணங்கேல் /
85. Don't comply with idiots.

86. பொருள்தனைப் போற்றி வாழ் /
86. Protect and enhance your wealth.

87. போர்த் தொழில் புரியேல் /
87. Don't encourage war.

88. மனம் தடுமாறேல் /
88. Don't vacillate.

89. மாற்றானுக்கு இடம் கொடேல் /
89. Don't accommodate your enemy.

90. மிகைபடச் சொல்லேல் /
90. Don't over dramatize.

91. மீதூண் விரும்பேல் /
91. Don't be a glutton.

92. முனைமுகத்து நில்லேல் /
92. Don't join an unjust fight.

93. மூர்க்கரோடு இணங்கேல் /
93. Don't agree with the stubborn.

94. மெல்லி நல்லாள் தோள்சேர் /
94. Stick with your exemplary wife.

95. மேன்மக்கள் சொல் கேள் /
95. Listen to men of quality.

96. மை விழியார் மனை அகல் /
96. Dissociate from the jealous.

97. மொழிவது அற மொழி /
97. Speak with clarity.

98. மோகத்தை முனி /
98. Hate any desire for lust.

99. வல்லமை பேசேல் /
99. Don't self praise.

100. வாது முற்கூறேல் /
100. Don't gossip or spread rumor.

101. வித்தை விரும்பு /
101. Long to learn.

102. வீடு பெற நில் /
102. Work for a peaceful life.

103. உத்தமனாய் இரு /
103. Lead exemplary life.

104. ஊருடன் கூடி வாழ் /
104. Live amicably.

105. வெட்டெனப் பேசேல் /
105. Don't be harsh with words and deeds.

106. வேண்டி வினை செயேல்/
106. Don't premeditate harm.

107. வைகறைத் துயில் எழு /
107. Be an early-riser.

108. ஒன்னாரைத் தேறேல் /
108. Never join your enemy.

109. ஓரம் சொல்லேல் /
109. Be impartial in judgement.

- ஔவையார்  / Avvaiyaar.