Tuesday, January 27, 2015

Paditthathil sinthikka thoondiyathu...

🏁கொஞ்சம் அவசரப்பட்டுதான் சுதந்திரம் வாங்கிவிட்டோம்!!

🎏இன்னுமொரு 50 வருடங்கள்
கழித்து வாங்கியிருக்கலாம்...

🔭அதற்குள் நாடுமுழுவதும் உள்ள
அத்தனை நதிகளையும்
இணைத்துவிட்டிருப்பான்
அந்த வெள்ளைக்காரன்,
நாம்தான் கூவத்தை கூட தூர்வாறாத கூமுட்டைகளாயிற்றே!

🚅நாடு முழுவதும் எப்போதோ
bullet rail வந்திருக்கும்,
நாம் இப்போது தான் மீட்டர்
கேஜ்களை broad gauge களாக மாற்ற போராடிக்கொண்டு இருக்கிறோம்!

🚇ஊட்டி ரயில்பாதையை எப்போதோ இருவழிபாதையாக மாற்றியிருப்பான் அந்த
வெள்ளைக்காரன்,
நாம் இன்னும் தண்டவாளத்தில் சரிந்த மண்ணை வாறுவதற்கு டென்டர் விட்டுக் கொண்டிருக்கிறோம்!

🏤நாடு முழுவதும் வெள்ளைக்காரனால்
கட்டப்பட்ட ஆயிரக்கணக்
கட்டிடங்களும் பாலங்களும்
அணைகளும் அப்படியே இருக்க
முந்தாநாள் கட்டிய Airport கட்டிடம் பத்துமுறை விழுந்துவிட்டது!

🚢நாட்டிற்கு வருமானத்தை தரும்
சேதுசமுத்திர திட்டத்தை நாற்பது வருடங்களுக்கு முன்னாலேயே நிறைவேற்றி இருப்பான்
வெள்ளைக்காரன்!

📖பணம்பிடுங்கும் பச்சோந்தி கல்விநிறுவனங்களுக்கு பதிலாக நாடு முழுவதும் ஒரே மாதிரியான
கல்விமுறை வந்திருக்கும்!
நாம் இன்னும் சமச்சீர் கல்விக்கும்,
இடஒதுக்கீட்டுக்கும்
போராடிக்கொண்டு இருக்கிறோம்!

🍞வெள்ளைக்காரனால் அடிமைப்பட்ட
அத்தனை நாடுகளும் இன்று உச்சத்தில் இருக்க நம் நாடு மட்டும் பாதுகாப்பின்றி
வயிற்று பசிக்கும் வாழ்க்கை பசிக்கும் மக்களை பலிகொடுத்துக்
கொண்டிருக்கிறது,
அடித்து வாங்க சக்தியில்லாமல்
அழுதுவாங்கிய சுதந்திரம் என்பதால் ஆளாளுக்கு விளையாடி அக்கறையின்றி தூக்கி எறிந்துகொண்டு இருக்கிறோம்!

🎏மண்ணுக்கு மட்டுமே சுதந்திரம்
வாங்கினோம் மக்களுக்கு வாங்க
தவறிவிட்டோம் !

💴120 கோடி மக்கள் தொகையில்
70 கோடி வறுமைக்கு கீழ்!
பெருமையாய் சொல்லிக்கொள்கிறோம்
70 ஆண்டுகளை நெருங்கிவிட்டோம் என்று!
இன்றுவரை பிளாட்பாரங்கள் நடக்க
பயன்படுவதில்லை நம் நாட்டு ஏழைகள் அங்கு குடியேறி இருப்பதால்!

🇮🇷எப்படி குத்திக்கொள்ளமுடியும்
கொடியை,
ஒவ்வொரு முறை குத்தும்போதும்
இடறி நெஞ்சுக்குள் குத்துகிறது!

🗿நம்நாட்டு பெண்களை கூட்டம்
கூடி கற்பழிக்கும் வரை,
நம்நாட்டு குழந்தைகள் தெருவில்
நின்று பிச்சைகேட்கும் வரை,
நம்நாட்டு பெண்சிசுக்கள்
கள்ளிப்பாலில் சாகும்வரை
நமக்கெல்லாம் அருகதையில்லை

🗽சுதந்திர நாடென்று சொல்லிக்கொள்ள!
ஆண்டுக்கு இரண்டு நாட்களிலும்,
அண்டை நாட்டு கிரிக்கெட்டிலும்
மட்டும் நாட்டுப்பற்று உயிர்வாழும்
என்றால் நாமதற்கு அடிமைப்பட்டே இருந்திருக்கலாம் நல்ல காலம் வரும்வரை!

📲SHARE PANNUNGA PLS...

Kuzhanthai valarppil kavanatthil kolla vaendiyavai....

3 unbelievably simple parenting ideas that work

1. Children need a minimum of eight  touches during a day to feel connected to a parent.

If they’re going through a particularly challenging time, it’s a minimum of 12 a day. This doesn’t have to be a big deal; it could be the straightening of a collar, a pat on the shoulder or a simple hug.

2. Each day, children need one meaningful eye-to-eye conversation with a parent.

It is especially important for babies to have that eye contact, but children of all ages need us to slow down and look them in the eyes.

3. There are nine minutes during the day that have the greatest impact on a child:

the first three minutes right after they wake up
the three minutes after they come home from school
the last three minutes of the day before they go to bed
We need to make those moments special and help our children feel loved.
These are simple, right? Nothing really earth-shattering here.

But try it.
1⃣ Whenever u feel like scolding or beating your child, take a deep breath, or count 1-10 and then act.
2⃣ Let's ask them to study their favorite subject on their own..
3⃣ Send them to one paper without studying at all..
4⃣ Remember what our kids are learning in 5th std is taught to 7th std abroad..
5⃣ Lets keep our kids out of unwanted competition.
6⃣ 80% of what kids are learning ,won't be useful to them in future..
7⃣ Our kids can really afford to do whatever they want to do in future .
8⃣ Higher degrees don't guaranty success and happiness..
9⃣ Not all the highly educated people do well professionally.
And not all those who do well professionally are the happiest ones..
🔟 Kids are always in a party mood.. don't spoil it .

Pass this on to as many  parents as u can..

Monday, January 26, 2015

உணவின்றி நீரின்றி எழுபது ஆண்டுகள்!

உணவின்றி நீரின்றி எழுபது ஆண்டுகள்!

‘83 வயதான ஒரு முதியவர் சுமார் எழுபது ஆண்டுகளுக்கு மேலாக உணவோ, நீரோ உட்கொள்ளாமல் நம் இந்தியாவில் வாழ்ந்து வருகிறார்’ என்று யாராவது சொன்னால், நமக்கு அது அண்டப் புளுகாகவே தோன்றும்.

ஆனால் அவர் பற்றிய தகவல்கள் மேலை நாடுகளையும் எட்டி, 2006–ம் ஆண்டு டிஸ்கவரி சேனலில் ‘தெய்வீக சக்திகளுள்ள சிறுவன்’ (The Boy with Divine Powers) என்ற ஒரு ஆவணப்படத்தில், அவரைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கும் அல்லவா?. அது மட்டுமல்ல. Independent Television Network (ITN ) என்ற தொலைக்காட்சி 2010–ம் ஆண்டில், அவரை வைத்து நடத்திய ஆராய்ச்சிகள் பற்றிய நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. அதே ஆண்டு ‘ஆரம்பத்தில் ஒளி இருந்தது’ ( In the Beginning There Was Light ) என்ற ஆஸ்திரிய நாட்டு ஆவணப்படத்தில் அவரைப் பற்றி குறிப்பிட்டு இருக்கிறார்கள். யாரவர்?

அவர் பெயர் பிரஹலாத் ஞானி (Prahlad Jani ) . ராஜஸ்தானில் பிறந்த அவர் சிறுவயதிலேயே வீட்டை விட்டு ஓடி காடுகளில் வசித்தவர். அவருடைய எட்டாம் வயதில் ஒரு தெய்வீக சக்தியுடைய பெண் (அவர் அம்பாள் என்று கூறுகிறார்), நேரில் வந்து அவர் நாக்கைத் தொட்டுப் போனதாகவும், அதற்குப் பின் அவருக்கு உணவோ, நீரோ தேவைப்படவில்லை என்றும் கூறுகிறார். அதற்குப் பிறகு அவர் ஒரு பெண்ணைப் போலவே சிவப்பு சேலை உடுத்திக் கொண்டு, பெரிய மூக்குத்தி குத்திக் கொண்டு, வளையல் அணிந்து கொண்டு வாழ ஆரம்பித்திருக்கிறார்.

1970–ம் ஆண்டு முதல், குஜராத் காட்டுப்பகுதியில் உள்ள அம்பாள் கோவில் ஒன்றின் அருகே பிரஹலாத் ஞானி வசித்து வருகிறார். அவரை அந்தப் பகுதியினர் மாதாஜி என்றழைக்கிறார்கள்.

அவர் தொண்டைப் பகுதியில் ஒரு துளை இருக்கிறது. ‘அது அம்பாள் ஏற்படுத்தியது என்றும், அதன் மூலம் உடல் தனக்கு வேண்டிய சக்தியை உள்ளே ஈர்த்துக் கொள்கிறது என்றும்’ பிரஹலாத் ஞானி கூறுகிறார். ‘முக்கியமாக சூரிய ஒளியில் உள்ள சக்தியை ஈர்த்துக் கொள்வதால் தான், தன்னால் எந்த பாதிப்பும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ முடிகிறது’ என்று அவர் சொல்கிறார்.

‘உணவின்றி மனிதன் ஒருசில வாரங்கள் உயிர்வாழ முடியும். நீரின்றி ஒருசில நாட்கள் உயிர்வாழ முடியும்’ என்று விஞ்ஞானம் கூறுகிறது. அதற்கு மேல் மனிதன் உயிர் வாழ்வதென்பது முடியவே முடியாது என்று உடலியல் மருத்துவ சாஸ்திரம் கூறுகிறது. ஏனென்றால் மூளை இயங்கத் தேவைப் படும் குளுக்கோஸ், உணவில் இருந்தே கிடைக்கிறது. குளுக்கோஸ் மூளைக்குக் கிடைக்க சில வினாடிகள் தடைப்பட்டாலும், அது உடலுக்கும் உயிருக்கும் அபாயத்தை ஏற்படுத்திவிடும் என்பது அனுபவ உண்மை.

அப்படி இருக்கையில், வருடக்கணக்கில் ஒருவரால் உணவு, நீர் இல்லாமல் இருக்க முடிகிறது என்பதைக் கேள்விப்பட்ட போது, அது உண்மை தானா?, இல்லை இதில் பித்தலாட்டம் ஏதாவது இருக்கிறதா? என்பதை அறிய சில மருத்துவர்கள் முன்வந்தார்கள். அவர்கள் பிரஹலாத் ஞானியை விஞ்ஞான ஆராய்ச்சிக்கு உட்படுத்தினார்கள்.

Defense Institute of Physiology and Allied Sciences ( DIPAS ) என்கிற மருத்துவ அமைப்பு, அகமதாபாத்தில் உள்ள ஸ்டெர்லிங் ஆஸ்பத்திரியில் (Sterling Hospital in Ahmedabad ) 2003–ம் ஆண்டு சுதிர் ஷா (Sudhir Shah ) என்ற மருத்துவர் தலைமையில் அவரைப் பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள். இந்தக் குழுவில் சில மருத்துவ நிபுணர்களும் இருந்தார்கள்.

மருத்துவ பரிசோதனை தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெற்றது. ஒரு மூடப்பட்ட அறையில் பிரஹலாத் ஞானியை தங்க வைத்தனர். பின்னர் முழு கண்காணிப்பில் வைத்து நடத்திய பரிசோதனையின் முடிவில், அவருடைய எடை சற்று குறைந்ததே ஒழிய மற்றபடி எல்லா விதங்களிலும் அவர் ஆரோக்கியமாகவே இருந்தார்.

இந்த செய்தி வெளியான பின்னர் தான் 2006–ம் ஆண்டு டிஸ்கவரி சேனலில், அவர் பற்றிய செய்தி வெளியாகியது. சில மருத்துவ நிபுணர்கள் இந்த பத்து நாள் பரிசோதனை முழுமையானது அல்ல என்றும், அவருடைய எடை குறைந்தது தங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது என்றும் கூற ஆரம்பித்தார்கள்

அதனால் DIPAS அமைப்பு 2010–ம் ஆண்டு, அதே மருத்துவர் சுதிர் ஷா தலைமையில் 35 ஆராய்ச்சியாளர்கள் கொண்ட ஒரு பெரிய குழு மூலம் மறு பரிசோதனை செய்ய முடிவெடுத்தது. அதற்கு பிரஹலாத் ஞானியும் ஒத்துக் கொண்டார். 2010–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22–ந் தேதியில் இருந்து மே மாதம் 6–ந் தேதி வரை பரிசோதனை நடைபெற்றது.

இந்த பரிசோதனை முறை முழுமையான விஞ்ஞான பூர்வமாக இருந்தது. அவர் தங்கி இருந்த அறையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. அவரை தினமும் ரத்த பரிசோதனை, ஸ்கேன் முதலான எல்லா பரிசோதனைகளும் செய்தார்கள். அவர் தன் உடலுக்குத் தேவை என்று சொன்ன சூரிய ஒளியில் அவரை இருக்க வைத்த சமயத்தில் கூட கேமரா அவரை விட்டு விலகவில்லை. எல்லாம் வீடியோவில் பதிவானது. சிறுநீர், மலம் கழிக்கத் தேவை இருக்காத காரணத்தால், பரிசோதனை நாட்களில் அவருடைய அறையை ஒட்டி இருந்த கழிவறையையும் பூட்டி வைத்திருந்தார்கள். அத்தனையும் அனில் குப்தா என்ற வேறொரு அமைப்பைச் சேர்ந்த ஒரு மருத்துவ பேராசிரியர் கண்காணிப்பில் நடைபெற்றது.

பதினைந்து நாட்கள் பரிசோதனை முடிவில், உடலின் முக்கிய உறுப்புகளான மூளை, சிறுநீரகம், இதயம் ஆகியவை பரிசோதிக்கப்பட்டன. மற்ற உடல்நலப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. அந்தப் பரிசோதனைகளில் பிரஹலாத் ஞானியின் உடல் நலம், ‘அவர் வயதில் பாதி மட்டுமே உள்ள, தினசரி உண்டு, நீரருந்தி வாழும் சராசரி மனிதனின் உடல்நலத்தை விட பல மடங்கு ஆரோக்கியமாக இருக்கிறது’ என்று மருத்துவர்கள் கூறினார்கள்.

ஆனால் அந்த அதிசயம் எப்படி நிகழ்கிறது என்பதை, அந்த மருத்துவ ஆராய்ச்சிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை. DIPAS அமைப்பு அந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முக்கியமான காரணம் பிரஹலாத் ஞானி உண்மையா போலியா என்பது மட்டுமல்ல. அதையும் தாண்டிய விரிந்த பார்வை ஒன்று இருந்தது.

உண்மையாக இருக்கும் பட்சத்தில் அது எப்படி என்று அறிந்தால், பல நாள் உணவு உட்கொள்ள முடியாத நிலைமையில் இருக்கும் விண்வெளி வீரர்கள், இயற்கை சீற்றங்களால் சில இடங்களில் சிக்கிக் கொள்ளும் மனிதர்கள், ராணுவ வீரர்கள் போன்றவர்களுக்கு அதைப் பயன்படுத்தலாம் என்கிற காரணம் தான் அது. ஆனால் அந்த சக்தியை ஏற்படுத்திக் கொள்ளும் விதத்தை அவர்களால், பிரஹலாத் ஞானி மூலம் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால் அந்த ஆராய்ச்சி முடிவுகளுக்குப் பிறகு தான் ITN தொலைக்காட்சியும், ஆஸ்திரிய ஆவணப்படமும் அவரைப்பற்றி விரிவாகச் சொல்லி பிரபலப்படுத்தின.

யோகக் கலையில் உண்மையாக தேர்ச்சி அடைந்த இந்திய யோகிகள், ‘காற்று மற்றும் சூரிய ஒளி ஆகிய இரண்டினால் மட்டுமே வாழ முடிந்தவர்கள்’ என்று கூறுவார்கள். அவர்களுடைய யோக சக்திகளின் சாத்தியக்கூறுகளை, பதஞ்சலியின் யோக சூத்திரங்களை படித்தவர்கள் மிகவும் நன்றாக அறியக்கூடும். அது விஞ்ஞான ஆராய்ச்சிகளின் பிடியில் அடங்கக்கூடியவை அல்ல. இங்கு நாம் குறிப்பிட்ட பிரஹலாத் ஞானி இந்த யோகசக்தி அல்லாமல், வேறெந்த அபூர்வ சக்தி படைத்தவராகவோ, மேலான ஆன்மிக ஞானம் பெற்றிருந்தவராகவோ நமக்குத் தெரியவில்லை.

ஆனால் ‘எல்லாமே ஒரு சாண் வயிற்றுக்குத் தானே’ என்று அடிக்கடி சொல்லும் நமக்கு, அந்த ஒரு சாண் வயிற்றின் தேவைகளில் இருந்து விடுபட்ட ஒருவரைப் பார்க்கையில் பிரமிப்பு ஏற்படுவது இயல்பே அல்லவா!

நன்றி http://suganesh80.blogspot.in

Sunday, January 25, 2015

இயற்கை மருத்துவம்... சீரகம்


சீரகத்தை வாழைப்பழத்துடன் பிசைந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்த மூலம் தீரும். எடையும் குறையும். சீரகத்தையும், உப்பையும் சேர்த்து தண்ணீர் குடித்தால் வயிற்றுவலிக்கு உடனடியாக தீர்வு தரும். சீரகத்துடன் கற்கண்டை கலந்து மென்று தின்றால் இருமல் போகும். சீரகப்பொடியோடு தேன் கலந்து சாப்பிட்டால் விக்கல் நிற்கும். சீரகத்தை அரைத்து உடம்பில் பூச அரிப்பு நின்றுவிடும். சீரகத்தை மென்று தின்றாலே வயிற்று வலி நீங்கி செரிமானம் நன்றாக ஏற்படும்.  சீரகப்பொடியோடு எலுமிச்சை சாறு சேர்த்து குழைத்து சாப்பிட்டால் பித்தம் அகலும். 

நல்லெண்ணெயில் சீரகத்தை  போட்டு காய்ச்சி எண்ணெய் தேய்த்து குளித்தாலும் பித்தம் நீங்கும்.  சீரகப்பொடியோடு தேன், உப்பு, நெய் சேர்த்து தேள் கொட்டிய இடத்தில் பூசினால் விஷம் முறிந்துவிடும். சீரகத்தை வறுத்து சுடுநீரில் போட்டு பால் கலந்து சாப்பிட பசி கூடும். மிளகுப்பொடியோடு கலந்து காய்ச்சி வடிகட்டிக் குடித்தால் அஜீரணம் மந்தம் நீங்கும். சீரகம் வில்வவேர்ப்பட்டை இரண்டையும் அரைத்து பாலில் கலந்து காலையில் குடித்து வர தாது பலம் கூடும்.  சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை சேர்த்து தூளாக்கி வைத்துக்கொள்ளவும். 

இதில் இரண்டு சிட்டிகை வீதம் தினம் இரண்டு வேளையாக சாப்பிட்டால் உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும். சீரகத்தை லேசாக வறுத்து அத்துடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர நரம்புகள் வலுப்பெறும். நரம்புத்தளர்ச்சி குணமாகும். சிறிது சீரகத்துடன் இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று ஒரு தம்ளர் குளிர்ந்த நீர் பருகினால் வயிற்று பொருமல் வற்றி நலம் பயக்கும். சீரகத்துடன் மூன்று பற்கள் பூண்டு வைத்து நன்றாக அரைத்து எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால் குடல் கோளாறுகள் குணமாகும். 

பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல் நோய்க்கு சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து நன்றாக அரைத்து எலுமிச்சை சாறில் சேர்த்து பருகி வர கல்லீரல் கோளாறு குணமாகும். சீரகத்தை தேயிலைத் தூளுடன் சேர்த்து கஷாயம் செய்து குடித்தால் சீதபேதி குணமாகும். கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்துப்  பொடி செய்து குடித்தால் சீதபேதி குணமாகும்.  த்து தேனில் குழைத்து சாப்பிட்டால் தொடர் விக்கல் விலகும். 

சிறிது தனியாவுடன் சிறிது சீரகம் சேர்த்து மென்று தின்றால் அதிகம் மது உண்ட போதை தணியும் திராட்சை பழச்சாறுடன் சிறிது சீரகத்தை பொடித்திட்டு  பருகினால் ஆரம்பநிலை ரத்த அழுத்த நோய் குணமாகும். மத்திய தர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது.

Friday, January 16, 2015

பெரும்பாலான பிரச்சனைகளை தீர்க்கும் ஒரே தைலம். / புதினா உப்பு / ஓம உப்பு / கட்டி கற்பூரம்


பெரும்பாலான பிரச்சனைகளை தீர்க்கும் ஒரே தைலம்.

இப்பொழுது அதன் செய்முறை பார்ப்போம். பிறகு அதன் பலன்களை பார்ப்போம்.

சித்த மருத்துவத்தில் செடி, கொடி, பட்டை,வேர், தழை முதலியவற்றை கொண்டு மருந்து செய்வது ஒரு முறை.

மற்றொன்று வீரம், பூரம்,லிங்கம்,தாளகம்,துத்தம் போன்ற பாஷணாங்களை கொண்டு மருந்து செய்வது ஒரு முறை.

மற்றொன்று தங்கம், வெள்ளி, செம்பு, அயம்,பித்தளை போன்ற உலோகங்களை கொண்டு மருந்து செய்வது ஒரு முறை.

மற்றொன்று வெடியுப்பு, இந்துப்பு, போன்ற உப்புக்களை கொண்டு செய்வது ஒரு முறை.

நாம் ஒரு முறையை பார்ப்போம்.
அனைத்து நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.
1) புதினா உப்பு
2) ஓம உப்பு
3) கட்டி கற்பூரம்

இம்மூன்றையும் சம அளவு வாங்கிக்கொள்ளவும். சுமார் 20கி வாங்கிக்கொள்ளலாம். அது அவரவர் விருப்பம்.

சரி இதை காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு அல்லது கண்ணாடி பாட்டிலில் போட்டு குலுக்க வேண்டும்.

இரண்டு மூன்று நிமிடங்கள் குலுக்கிய உடன் அது திட நிலையில் இருந்து திரவ நிலைக்கு மாறிவிடும்.
இப்பொழுது தைலம் தயார்.

இது மிகவும் வீரியமான தைலம்.

உடலில் எங்கெல்லாம் வலி உள்ளதோ அங்கெல்லாம் ஓரிரு சொட்டுகள் மட்டுமே தேய்க்கவேண்டும். முழங்கை, மூட்டு, இடுப்பு போன்ற இடங்களில் தேய்க்க வேண்டும்.

இதனுடைய பலன் இத்துடன் நின்றுவிட வில்லை.

நீங்கள் பயன் படுத்தும் பல்பொடி மற்றும் பேஸ்ட் எதுவானாலும் அதில் சுமார் பத்து சொட்டுகள் விட்டால் போதும். ஆயுளுக்கும் பல் சம்பந்தமான பிரச்சனை கிட்ட வராது.
பல்லரணை , பற்குத்து , ஈறு வீக்கம்,ஈறுகளில் சீழ் வடிதல் , வாய் துர் நாற்றம் போன்றவை அணுகவே அணுகாது .இருந்தால் தைலத்தை உபயோகிக்க ஓரிரு நாட்களில் பறந்தோடும்.

இதை 100 மிலி தேங்காய் எண்ணெயுடன் 15சொட்டுக்கள் கலந்து பயன்படுத்த சாந்தமாக வேலை செய்யும்.சளி , இளைப்பிருமல் ,ஆஸ்துமா போன்றவற்றிற்கு வெளிப்பிரயோகமாக தேய்த்துவிட நல்ல பலனளிக்கும். உள்ளே உறைந்திருக்கும் சளி இளகி தொல்லையில்லாமல் வெளியேறும்.

கோமா நிலையில் இருப்பவர்களுக்கு தைலத்தை பொட்டுக்கள் , பிடரி மற்றும் தலைக்கு இரத்தம் கொண்டு செல்லும் முக்கிய இரத்த நாளங்களின் மேல் ஒரிரு சொட்டுக்கள் விட்டு தேய்க்க விரைவில் விழித்தெழுவார்கள்.

சுரம் உள்ளவர்கள் காபி, டீ போன்ற வற்றில் மூன்று சொட்டுகள் விட்டு குடிக்க அடுத்த ஐந்து நிமிடங்களில் சுரம் பறந்தோடும்.

இந்த தைலம் கண்களுக்கு அதிக எரிச்சலை ஊட்ட வல்லது .எனவே கண்களுக்கு நெருக்கமாக இதை உபயோகிக்க வேண்டாம்.கண்ணில் பட்டுவிட்டாலோ அல்லது மின்சாரத் தைலம் தடவிய பின் கண்களில் கையை வைத்துவிட்டாலோ கடும் எரிச்சல் உண்டாகும் அப்போது குளிர்ந்த நீரில் எரிச்சல் தணியும் வரை கண்களைக் கழுவவும்.

Saturday, December 27, 2014

Lucky and joyous days......

We, the people born between 1950-1989, are the blessed ones...
We are d awesome people. Our life is a living proof..........
      👉We were never treated like  a pack of animals to carry our books to school.
             👉While playing and riding bicycle, we never bothered to wear helmets.
             👉After school time we played until its dusk but never watched t-world (TV) by locking up ourselves in a room.
            👉We played only with our real friends, not with NET friends.
            👉 If we ever felt thirsty, we used to drink tap water but never searched for bottled water.
             👉We never got ill even after sharing the same juice with four friends.
             👉We were never put on weight even after eating plate full of sweets and rice everyday.
             👉Nothing happened to our feet even after roaming bare foot.
             👉We never used any health supplements to keep ourselves healthy.
              👉We used to create our own toys and play with them.
              👉Our parents were not rich, they never ran behind money and wealth. They just searched for and gave only love.. not any worldly materials.
             👉We stayed nearby to them so that they can communicate with us. Just one word by them was enough to communicate. hence we never required any mobile phones to communicate.
           👉We never visited doctor when we got ill but the doctor visited us during our illness.
            👉We never used to share our emotions just by emoticons in mobile phones.
           👉We used to listen to the truth and voice of our conscience and used to write those things only in the letters, hence we never used to change our words.
             👉We never had cellphones, DVDs, Play stations, XBoxes, video games, Personal computers, internet, chat but we had many real friends.
              👉We used to visit our friend's home uncalled and enjoyed food with them. We never had to call them and ask their permission to visit their home.
            👉Relatives were near to us so our hearts and souls were happy. Hence we never required any insurance policy.
             👉We may have been in Black and White photos but you can find good colourful memories in those photos........
👌 👌 👌 excellent ..  So true

உடல் பாகத்திற்கென கடிகாரம்

நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென
தனித்தனியே கடிகாரத்தின்
அலாரத்தை முன்பதிவு செய்து கொண்டு
சுழன்று கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு உறுப்புக்கும் அதன்
பணியை செய்து முடிக்க இரண்டு மணி நேரம்
ஒதுக்கியுள்ளது. இரண்டு மணி நேரம் முடிந்ததும்
மீண்டும் அலாரத்தை அடுத்த
உறுப்புக்கு மாற்றி விடுகிறது.

விடியற்காலை 3.00 மணிமுதல் 5.00
மணிவரை நுரையீரலின் நேரம். இந்த நேரத்தில்
சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராண சக்தியை உடலுக்குள் அதிகமாகச்
சேகரித்தால் ஆயுள் நீடிக்கும்.
தியானம் செய்யவும் ஏற்ற நேரம் இது. ஆஸ்துமா நோயாளிகள் இந்த நேரத்தில் மிகவும்
சிரமப்படுவார்கள்.

விடியற்காலை 5.00 மணிமுதல் 7.00 மணிவரை பெருங்குடலின் நேரம்.
காலைக்கடன்களை இந்த நேரத்துக்குள் முடித்தே தீர
வேண்டும் மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த நேரத்தில்
எழுந்து கழிவறைக்குச் செல்லும்
பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் நாளடைவில் மலச்சிக்கல் தீரும்.உயிரணுக்களின்
எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ள நேரமும்
கூட இதுவே.

காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை வயிற்றின்
நேரம்.
இந்த நேரத்தில் கல்லைத் தின்றாலும்
வயிறு அரைத்து விடும். காலை உணவை பேரரசன்
போல் உண்ண வேண்டும் என்று சொல்வார்கள்.
இந்த நேரத்தில் சாப்பிடுவதுதான் நன்கு செரிமானமாகி உடலில் ஒட்டும்.

காலை 9.00 மணிமுதல் 11.00
மணி வரை மண்ணீரலின் நேரம்.
காலையில் உண்டஉணவை மண்ணீரல்
செரித்து ஊட்டச் சத்தாகவும் ரத்தமாகவும் மாற்றுகிற
நேரம் இது. இந்த நேரத்தில் பச்சைத் தண்ணீர் கூடக்
குடிக்கக்கூடாது. மண்ணீரலின் செரிமான சக்தி பாதிக்கப்படும்.
நீரழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரம் இது.

முற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 1.00
மணி வரை இதயத்தின் நேரம். இந்தநேரத்தில்
அதிகமாகப் பேசுதல், அதிகமாகக் கோபப்படுதல்,
அதிகமாகப் படபடத்தல் கூடாது. இதயம்
பாதிக்கப்படும். இதய நோயாளிகள் மிகமிக
எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்.

பிற்பகல் 1.00 மணிமுதல் 3.00
மணி வரை சிறு குடலின் நேரம்.
இந்த நேரத்தில் மிதமாக மதிய
உணவை உட்கொண்டு சற்றே ஓய்வெடுப்பது நல்லது.

பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00
மணிவரை சிறுநீர்ப்பையின் நேரம்.
நீர்க்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம்.

மாலை 5.00 மணி முதல் 7.00
மணி வரை சிறுநீரகங்களின் நேரம். பகல்
நேரபரபரப்பிலிருந்து விடுபட்டு அமைதி பெற,
எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க,தியானம்செய்ய,
வழிபாடுகள் செய்ய சிறந்த நேரம்.

இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை,
பெரிகார்டியத்தின் நேரம்.
பெரிகார்டியம்என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும்
ஒரு ஜவ்வு இதயத்தின் Shock absorber.
இரவு உணவுக்கு உகந்த நேரம் இது.

இரவு 9.00 மணி முதல் 11.00 மணி வரை, டிரிப்பிள்
கீட்டர் என்பது ஒரு உறுப்பல்ல.
உச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ள
மூன்று பகுதிகளை
இணைக்கும் பாதை. இந்த நேரத்தில் உறங்கச்
செல்வது நல்லது.

இரவு 11.00 மணி முதல் 1.00
மணி வரை பித்தப்பை இயங்கும் நேரம். இந்த
நேரத்தில்தூங்காது விழித்திருந்தால்
பித்தப்பை இயக்க குறைபாடு ஏற்படும்.

இரவு 1.00 மணி முதல் விடியற்காலை 3.00
மணி வரை கல்லீரலின் நேரம். இந்தநேரத்தில் நீங்கள்
உட்காந்திருக்கவோ விழித்திருக்கவோ கூடாது.
கட்டாயம் படுத்திருக்க வேண்டும். உடல் முழுவதும்
ஓடும் ரத்தத்தை கல்லீரல்
தன்னிடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது. இந்த பணியை நீங்கள் பாதித்தால் மறுநாள் முழுவதும் சுறுசுறுப்பில்லாமல் அவதிப்படுவீர்கள்.

மிகவும் பயனுள்ள தகவல்கள்..அனைவரும் ஷேர்
செய்தால் படிப்பவர் மிகப்பயன் பெறுவர்.