Saturday, May 4, 2013

தெரிந்து கொள்வோமா-114 [காகிதத்தின் வரலாறு...]

காகிதம் உருவான வரலாறு – History of paper making..!

எழுத்துக்கள் எப்படி தோன்றியிருக்கும் என்று எப்போதாவது சிந்தித்து பார்த்ததுண்டா நண்பர்களே., மனிதர்களின் நினைவாற்றலின் வலிமை ஒரு குறிப்பிட்ட எல்லையை கொண்டது, அதாவது மனிதனால் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு அனைத்து விசயங்களையும் நினைவில் வைத்துக்கொள்ள முடியாது. அந்த நினைவாற்றலின் எல்லையை தாண்டியும் சில தகவல்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்ட போது தோன்றியது தான் எழுத்து. அன்றைய அரசாங்கத்தின் நிர்வாகத்துறையில் உள்ள வரவு செலவு கணக்குகளும், வணிகப்பரிமாற்றத்தின் பரிவர்த்தனைகளும் மனித நினைவாற்றலின் எல்லையை தாண்டி வளர்ந்தபோது அந்த கணக்குளை குறித்து வைத்துக்கொள்ள தோன்றியது தான் எழுத்து.

அன்றைய ஆதிமனிதன் முதன் முதலில் எழுத்துக்களை பதித்து வைத்தது கற்களின் மீதுதான், எழுதப்பட்ட கற்களை தேவை ஏற்பட்டபோது ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்வதில் ஏற்பட்ட சிக்கல்களை தொடர்ந்து, விலங்குகளின் எலும்புகளிலும், மூங்கில் தடிகளின் மீதும் மனிதன் எழுதத் துவங்கினான். நாளடைவில் இதிலும் ஏற்பட்ட portability குறைபாடு அவனை களிமண் தகடுகளின் மீது எழுதச் செய்தது. களிமண் தகடுகளை கையாள்வது சுலபமாக இருந்தாலும், அவற்றை வைத்து பராமரிக்க அதிக இடம் தேவைப்பட்டதால், இதுவும் தோல்வியுற்றது.

இன்று நாம் எழுதுவதற்க்காக பயன்படுத்திக் கொண்டிருக்கும் பேப்பர்களின் தோற்றத்தையொத்த பொருளில், உலகில் முதன் முதலில் எழுதியவர்கள் எகிப்தியர்கள் தான். கி.மு. ஏழாம் நூற்றாண்டில் எகிப்தின் நைல் நதியின் டெல்டா பகுதியில் விளைந்த, இரெண்டு முதல் மூன்று மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய ஒரு தாவரம் பாப்பிரஸ் (Cyperus Papyrus ஆகும். இந்த பாப்பிரஸ் தாவரத்தின் தண்டுபகுதியை நுண்ணிய துண்டுகளாக வெட்டி, அதனுடன் நீர் மற்றும் சில தாதுக்களை சேர்த்து பதப்படுத்தி பின்பு அதனை சூரிய ஒளியில நன்றாக உலரவைத்து, பின்பு அதனை எழுதுவதற்கென்று பயன்படுத்தி வந்தனர் அன்றைய எகிப்தியர்கள். இதுதான் மனிதன் முதன் முதலில் பேப்பெரில் எழுதிய அனுபவம் ஆகும். மேலும் பேப்பர் (Paper) என்ற சொல்லும் பாப்பிரஸ் (Papyrus) என்ற சொல்லில் இருந்து பிறந்ததே ஆகும்.

எகிப்தியர்கள் பாப்பிரஸ் தாள்களில் எழுதிவந்த அதே கால கட்டத்தில் சீனர்கள் விலங்குகளின் எலும்புகளிலும், மூங்கில் தடிகளிலும் தான் எழுதிவந்திருக்கிறார்கள். பண்டைய சீனாவில் கி.மு.206-ஆம் ஆண்டு முதல் கி.பி.220-ஆம் ஆண்டுவரை சங்கனை (Changan) தலைநகராக கொண்டு ஆட்சி செய்துவந்த ஹான் வம்சத்தினர் (Han Dynasty) காலத்தில் குய்யங்கில் (Guiyang – தற்போது இந்நகரம் லேய்யங் (Leiyang) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது) நீதிமன்ற ஆவன காப்பாளராக வேலை பார்த்து வந்தவர் கைய் லுன் (Cai Lun). அவரது காலத்தில் நீதிமன்ற குறிப்புகள் அனைத்தும் விலங்குகளின் எலும்புகளிலும், மூங்கில் தடிகளிலும் தான் எழுதப்பட்டு வந்தது. இவற்றை ஒரு இடத்திலிருந்து மற்றொறு இடத்திற்கு எடுத்துச் செல்வதில் ஏற்பட்ட சிரமத்தை தொடர்ந்து கைய் லுன் மாற்று வழி பற்றி ஆராய ஆரம்பித்தார்.

கைய் லுன், கி.பி. 105-ல் மரநார்கள், தாவரத்தின் இலைகள், மீன்பிடி வலைகள், மற்றும் துணி கழிவுகள் ஆகியவற்றை கொண்டு பேப்பேர் தயாரிக்கும் முறையை கண்டறிந்தார். கைய் லுனின் இந்த கண்டுபிடிப்பை பாராட்டி அப்போதைய அரசாங்கம் அவருக்கு பதவியுயர்வும், பொற்கிழியும் வழங்கி கெளரவித்தது. இம்முறையில் கண்டறியப்பட்ட காகிதம் சற்று தடிமனாக இருந்தது அதாவது சற்றேறக்குறைய 5mm வரை தடிமனாக இருந்தது. 

சிறிது காலத்திற்கு பிறகு கைய் லுன் தற்செயலாக ஒரு காட்சியை காண நேரிட்டது அது என்னவென்றால் ஒரு வகை குளவி (Wasp) மரத்தை துளையிட்டு அதம் மூலம் கிடைத்த சிறு மரத்துகள்களை கொண்டு தனது கூட்டை வலிமையாக கட்டிக்கொள்வதை கண்டார், அப்போதுதான் மரத்தை கூழ்மமாக அரைத்தால் பேப்பரை நாம் விரும்பும் வடிவில் மற்றும் அளவில் தயாரித்துக்கொள்ளலாம் என்பதை அறிந்துகொண்டார். அதனை தொடர்ந்து மரத்தை அரைக்கும் ஆலை நிறுவப்பட்டு பேப்பர் தயாரிக்கப்பட்டது. கி.பி. 105-ல் பேப்பர் தயாரிக்கும் முறை கண்டறியப்பட்டுவிட்டாலும் உலகிற்கு பகிரங்கமாக பேப்பர் தயாரிக்கும் தொழில்நுட்பமுறை அறிவிக்கபடவில்லை. சீனர்கள் ஏறக்குறைய அத்தொழில்நுட்பத்தை 500 ஆண்டுகளுக்கும் மேலாக ரகசியமாகவே வைத்து பாதுகாத்துள்ளனர்.

கி.பி.751-ல் சீனர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையே தற்போதைய உஸ்பெகிஸ்தானில் டாலஸ் (Battle of Talas) என்ற போர் ஏற்பட்டது. கிர்கிஸ்தானுக்காக நிகழ்ந்த இந்த டாலஸ் போரில் (Battle of Talas) சீனப்படைகள் அரேபிய படைகளிடம் தோல்வியை தழுவியது, அப்போது அரேபியர்களால் போர்க்கைதிகளாக பிடிக்கப்பட்ட இரு சீனவீரர்களிடம் இருந்து பேப்பர் தாயாரிக்கும் தொழில்நுட்பத்தை அரேபியர்கள் அறிந்துகொண்டனர். அத்தொழில்நுட்பத்தை கொண்டு உஸ்பெகிஸ்தானிலுள்ள சமர்கண்ட் (Samarkand) என்ற நகரில் அதிகாரப்பூர்வமான முதல் பேப்பர் தயாரிக்கும் ஆலையை அரேபியர்கள் நிறுவினார்கள், அதனை தொடர்ந்து ஈராக் தலைநகர் பாக்தாத்திலும் ஒரு ஆலை நிறுவப்பட்டது. பாக்தாத்திலிருந்துதான் ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு பேப்பர் தயாரிக்கும் தொழில்நுட்பம் பரவியது.

பதினெட்டாம் நூற்றாண்டு வரையில் பேப்பர் கடும் நிறம் (கால்நடைகளின் சான நிறம்) கொண்டதாகத்தான் இருந்தது, 1844-ஆம் ஆண்டு சார்லஸ் (Charles Fenerty) மற்றும் கெல்லர் (Gottlob Keller) ஆகியோர் இணைந்து வெள்ளை நிற பேப்பரை உருவாக்கும் தொழில் நுட்பத்தினை கண்டறிந்தார்கள். அன்றுமுதல் வெள்ளை நிற காகிதம் தயாரிக்கப்பட்டு வருகிறது. நாம் வீணடிக்கும் ஒவ்வொரு பேப்பரிலும் ஒரு மரத்தின் உயிர் வீணடிக்க படுகிறது என்பதை மனதில் கொண்டு பேப்பர்களை மிக சிக்கனமான உபயோகித்து சுற்றுசூழலுக்கு நம்மால ஆன நன்மையை செய்திடுவோம்.

நன்றி: வரலாற்று சுவடுகள்.

நன்றி-இன்று ஒரு தகவல்...

Wednesday, May 1, 2013

தெரிந்து கொள்வோமா-113 [எய்ட்ஸ் போன்ற இரத்தப் பரிசோதனைகளுக்கு....]

இனி டிவிடி டிரைவ்வைக் கூட மைக்ரோஸ்கோபாக பயன்படுத்த முடியும்…!

ஆம்- ஸ்வீடனில் உள்ள ஒரு ஆராய்ச்சி நிறுவனம் இதுவரை அதிக நாட்கள் மற்றும் அதிக செலவுகளில் மைக்ரோஸ்கோப் மூலம்தான் எயிட்ஸ் உள்ளிட்ட சில அரிய ரத்த பரிசோதனையை செய்து கொண்டிருந்தது. இப்போது அதை உடைக்கும் வண்ணமாக வெறும் உங்கள் டிவிடி ராம் மற்றும் பிளேயரிலேயே உங்கள் ரத்த மாதிரியை சோதனை செய்யலாமாம்.
அது மட்டுமல்லாமல் எயிட்ஸ் டெஸ்டிங்கிற்க்கு இதுவரை ஆகும் மூனு நாள் முதல் 7 நாள் முதல் என்பது இனிமேல் சில நொடிகளில் ரிசல்ட் வந்து விடும்.

மேலும் இந்த மெஷின் இதுவரை ஒரு பெரிய ரூமில் அரை ரூமை அடைக்கும் அளவுக்கு பெரிதாகவும் அது போக இதன் விலை ரூபாய் 16 லட்சமாக இருந்தது. அப்பேர்பட்ட ஒரு மெஷினை வெறும் 10,000 ரூபாய்க்குள் செய்ய முடியும் என்பது தான் பெரிய சாதனை. இதன் பெயர் லேப் ஆன் டிவிடி என்பதாகும்.

A research team in Sweden has converted a commercial DVD drive into a laser scanning microscope that can provide on-the-spot HIV testing and other analytics. School of Biotechnology at KTH Royal Institute of Technology in Stockholm, said the device can analyse blood and perform cellular imaging with one-micrometre resolution. The Lab On DVD technology itself took almost 3 long decades to materialise – and is based on the advance research done on optical storage mechanisms. The technology expects to bring the cost of flow cytometry units from $30k down to just $200. Portability, of course comes free with it.

(நன்றி- ஆந்தை ரிப்போர்ட்டர்...)

தெரிந்து கொள்வோமா-112 [நாடுகளின் பழைய பெயர்கள்...]

சில உலக நாடுகளின் பழைய பெயர்களும் - புதிய பெயர்களும்.


டச்சு கயானா - சுரினாம்

அப்பர் வோல்டா - புர்க்கினா பாஸோ

அபிசீனியா - எத்தியோப்பியா

கோல்டு கோஸ்ட் - கானா

பசுட்டோலாந்து - லெசதோ

தென்மேற்கு ஆப்பிரிக்கா - நமீபியா

வட ரொடிஷியா - ஜாம்பியா

தென் ரொடிஷியா - ஜிம்பாப்வே

டாங்கனீகாம், சன்ஸிபார் - தான்சானியா

சாயிர் - காங்கோ

சோவியத் யூனியன் - ரஷ்யா

பர்மா - மியன்மார்

கிழக்கு பாக்கிஸ்தான் - வங்காளதேசம்

சிலோன் - ஸ்ரீலங்கா

கம்பூச்சியா - கம்போடியா

பாரசீகம், பெர்ஷியா - ஈரான்

மெசபடோமியா - ஈராக்

சியாம் - தாய்லாந்து

பார்மோஸ் - தைவான்

ஹாலந்து - நெதர்லாந்து

மலாவாய் - நியூசிலாந்து

மலகாசி - மடகாஸ்கர்

பாலஸ்தீனம் - இஸ்ரேல்

டச் ஈஸ்ட் இண்டீஸ் - இந்தோனேசியா

சாண்ட்விச் தீவுகள் - ஹாவாய்

அப்பர் பெரு - பொலிவியா

பெக்குவானாலாந்து - போட்ஸ்வானா

தெரிந்து கொள்வோமா-111 [ரீஃபைண்டு எண்ணை???]

" ரீஃபைண்ட் ஆயில் " - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்..!

உங்க வீட்ல ரீஃபைண்ட் ஆயில் பயன்படுத்துறீங்களா.? அப்ப இதை
கட்டாயம் படிங்க...

" க்ரைம் நாவல்"-ல ராஜேஷ்குமார் ஒரு வாசகர்க்கு எழுதின பதிலை இங்கே
அப்படியே போடறேன்..

உணவியல் பற்றி நன்கு அறிந்த திரு.S.சக்ரபாணி ஒரு கட்டுரையில் நாம் உபயோகிக்கும் சமையல் எண்ணெய் பற்றி சில அதிர்ச்சியான விபரங்களை சொல்லியிருந்தார்.. 

அதை தான் இப்போது சொல்லப் போகிறேன். நம் முன்னோர்கள் அந்த காலத்தில் செக்கில் ஆட்டி எடுத்த தேங்காய் எண்ணெயையும்., நல்லெண்ணையையும் அப்படியே உபயோகித்தனர்.

இந்த எண்ணெய்கள் அடர்த்தியாகவும்., நிறமாகவும்., மணமாகவும் இருக்கும்.

இதற்கு காரணம் அந்த எண்ணெய்களில் உள்ள ஊட்டசத்துக்கள் தான். இதனால் தான் உடல் ஆரோக்கியத்திற்க்கு தேவையான புரோட்டீன்கள், வைட்டமின்கள், தாதுப்பொருள்கள், நார்ச்சத்துக்கள் ,குளோரோபில், கால்சியம், மெக்னீசியம்,காப்பர், இரும்பு, பாஸ்பரஸ், வைட்டமின் " இ " போன்றவை நமக்கு கிடைத்து வந்தன..

இந்த தாதுப்பொருட்கள் மூலம் உற்பத்தியாகும் மெழுகு போன்ற பொருள்கள் மூட்டுகளுக்கு சென்று., எலும்பு தேய்மானத்தை தடுத்தன. நம் முன்னோர்கள் உடற்பயிற்சி செய்து முடித்ததும் ஒரு கிண்ணம் நிறைய நல்லெண்ணெய் குடிக்கும் வழக்கத்தையும் வைத்து இருந்தனர்.

இதை உணவுக்கு மட்டுமின்றி. குளியலுக்கும், மசாஜ் செய்வதற்க்கும் உபயோகித்த காரணத்தால் அவர்கள் 80 வயது வரை மூட்டு வலியின்றி கால்நடையாகவே சென்று வந்தனர்.

அதனால் தான் எல்லாம் அறிந்த நம் முன்னோர்கள் இதை எள் எண்ணெய் என்று சொல்வதற்கு பதிலாக " நல்ல எண்ணெய் " என்று சொன்னார்கள். 

வெளிநாட்டில் கூட இதை " Queen of Oil" என்று அழைக்கிறர்கள்.

ஆனால் இன்று நாம் உபயோகிக்கும் ரீஃபைண்ட் ஆயிலில் உயிர்சத்துக்கள்
எதுவுமே இல்லை என்பது அதிர்ச்சியான உண்மை.

சரி., ரீஃபைண்ட் ஆயில் எப்படி தயாரிக்கிறார்கள் என்று பார்ப்போமா..

மில்லில் இருந்து பெறப்பட்ட எண்ணெய்யில் காஸ்டிக் சோடாவை சேர்த்து கொதிக்க வைத்து முதலில் அதிலிருந்து சோப்பு எடுக்கிறார்கள்.

பிறகு அதிகம் இருக்கும் காஸ்டிக் அமிலத்தின் மூலம் அகற்றி நீயூட்ரலைஸ் செய்து அதில் இருக்கும் வாசனையை அறவே நீக்கிவிடுகிறார்கள்.

பிறகு அதை சால்வெண்ட் எக்ஸ்ட்ராக்சன் மூலம் பிரித்து எடுக்கிறார்கள்.

இதை எல்லாம் நேரில் பார்த்தால் நம்மில் பலருக்கு சாப்பிடவே பிடிக்காது. திரைமறைவில் நடக்கும் இந்த வேலைகள் எல்லாம் மக்களுக்கு தெரியாத காரணத்தால் " சுத்தம் செய்யப்பட்ட எண்ணெய் " என்று நினைத்து ரீஃபைண்ட் ஆயிலை உபயோகித்து கொண்டு இருக்கிறார்கள்.

உண்மையில் ரீஃபைண்ட் ஆயில் என்பது அடர்த்தி இல்லாத தண்ணீர் போன்ற ஒரு திரவம்.

சமையலுக்கு இதை பயன்படுத்தும் போது சூடு தாங்காமல் உருக்குலைந்து உடல் ஆரோக்கியத்திற்கு தீமை விளைவிக்கும் ஒரு ரசாயன கலவையாக மாறுகிறது.

செக்கில் ஆட்டி எடுக்கப்படும் இயற்க்கையான எண்ணெய்யை சூடுப்படுத்தினால்... அது ரசாயன கலவையாக மாறாது. அதன் தாதுப் பொருள்கள் அப்படியே சிதையாமல் நமக்கு கிடைக்கும்.

எண்ணெய் விஷமாக மாறிவிட்டதால் இன்று மக்கள் பலவிதமான் நோய்களுக்கு உள்ளாகி சிகிச்சைகள் எடுத்து கொள்வதற்க்காக பெரிய தொகைகளை செலவழித்து கொண்டு இருக்கிறார்கள்.

ரசாயன பொருட்களால் பாழ்படுத்தப்பட்டு., உடல் ஆரோக்கியத்திற்க்கு அவசியமான பொருட்கள் நீக்கப்பட்ட ஒரு திரவத்தை ரீஃபைண்ட் ஆயில் என்ற பெயரில் விற்பனை செய்ய அரசாங்கமும்., மெடிக்கல் கவுன்சில்களும்
எப்படி அனுமதி அளிக்கின்றன...??

நாமும் யோசிக்கும் சக்தியை ஏன் இழந்து விட்டோம்.?
நமக்கு வரும் நோய்களுக்கு எல்லாம் சுற்றுசூழல் மாசுப்பட்டு இருப்பது தான் காரணம் என்று சொல்லி நம்மை நாமே ஏமாற்றி கொள்கிறோம்.

கடந்த 60-70 ஆண்டுகளில் நோய்கள் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மக்களை வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறது.

இதற்க்கான காரணங்களில் முக்கியமான இடத்தை பிடித்து இருப்படி ரீஃபைண்ட் ஆயில்.

" விஞ்ஞானம் வளர்ந்து கொண்டிருக்கிறது அதற்க்கு ஏற்றார்போல் நாமும் மாற வேண்டும்." என்று சிலர் சொல்லக்கூடும்.

ஆனால் விஞ்ஞானம் தொழில்துறையில் சாதனைகள் படைத்திருக்கலாம். அதற்காக நம்முடைய உடல் ஆரோக்கியத்தோடு அந்த விஞ்ஞானம் விளையாடக்கூடாது.


(திரு. கோகுலத்தில் சூரியன் வழியாக...)

தெரிந்து கொள்வோமா-110 [விமானத்தின் கருப்புப் பெட்டி...]

கறுப்புப் பெட்டி'யின் நிறம் ஆரஞ்சு !!!!


விமான விபத்து நடைபெற்றால் முதலில் 'கறுப்புப் பெட்டி'யைத்தான் தேடுவார்கள். 'கறுப்புப் பெட்டி' என்றால் என்ன? அதற்கும் விமானத்துக்கும் என்ன சம்பந்தம்?

ஒவ்வொரு விமானத்திலும் இந்தக் 'கறுப்புப் பெட்டி' கட்டாயம் இருக்கும். ஆனால் இந்தப் பெட்டிக்கும், விமானம் பறப்பதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லாததால் இதற்கு 'கறுப்புப் பெட்டி' (Black Box) என்று பெயர்.

இந்தப் பெட்டியை விமானிகள் இருக்கும் 'காக் பிட்' பகுதியில் பொருத்தியிருப்பார்கள். இதில் இருக்கும் ரெக்கார்டரில், விமானிகள் பேசுவது எல்லாம் பதிவாகும். அது தவிர விமானம் பறக்கும் வேகம், எந்தத் திசையில் பறந்துகொண்டிருக்கிறது என்பன போன்ற முக்கியமான விவரங்கள் பதிவாகும்.

'கறுப்புப் பெட்டி'யில் பதிவாகும் விஷயங்களைக் கொண்டு, விமான விபத்து எப்படி ஏற்பட்டது என்று கண்டுபிடித்துவிடலாம் என்பதால் இது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.


உயர்ந்திட வா இளைஞனே...

இளைஞனுக்கு வாழ்வு செழிக்க வழிகாட்டி
*************************************

1. உனக்குத் தெரிந்த நல்லவரை – வல்லவரை குருவாக ஏற்றுக்கொள்.

2. அவருடன் உன் அறிவைப் பெருக்கிக்கொள்ள கேள்வி கேட்டுப் பழகு.

3. படிக்கின்றபொழுது படிப்பை மட்டுமே முதலாவதாக்க் கொள்ள வேண்டும்.

4. நல்லவற்றை மட்டும் பழகிக் கொள்.

5. படிக்கின்ற காலத்தில் நட்பை அதிகப் படுத்தாதே. அந்த சமயத்தில் இனிக்கும். பின் கசக்கும்.

6. சிக்கனமாக செலவு செய்து அளவாக சேமித்து வை.

7. விடுமுறைக் காலத்தில் நல்ல நூல்களைப் படித்து பயனடைந்து கொள்.

8. நீ வருத்தப்படும் அல்லதுத கஷ்டப்படும் அல்லது துன்பமாக நினைக்கிற எந்த செயலாக இருந்தாலும் மற்றவரிடம் பகிர்ந்து கொள்.

9. படிப்பு முடித்தபின் உன்னுடைய நேரத்தை பொழுது போக்குகளின் செலவு செய்வதை விடுத்து ஏதாவது ஒரு தொழிலை கற்றுக்கொள். தேடிச்சென்று வாய்ப்பை ஏற்படுத்திக்கொள். தானாக எதுவும் வராது.

10. உன் படிப்புக்கு தகுந்த வேலை கிடைக்கவில்லை என்று வருத்தப்படாமல் வலிய சென்று இருக்கும் வேலையை செய்.

11. வாழ்வில் உயர்ந்தவர்கெல்லாம் கிடைக்கும் வேலையைச் செய்து கொண்டே உயர்ந்த நிலையை அடைந்தனர் என்பது வரலாறு.

12. மனதை தெளிவாக வைத்துக் கொள்.

13. கோபப்படாமல் பொறுமையாக இருந்து நல்லதையே நினைத்து நல்லனவற்றையே செய்தால் வெற்றி பெறுவாய்.

14. ஒவ்வொரு உயிரும் எதிர்பாரப்பது அன்பு, ஆதரவு, பாராட்டு. நீ ஒவ்வொருவரிடமும் எதிர்பார்ப்பதும் அதுவே.

15. எல்லோரையும் அனுசரித்துச் சென்று உன் எண்ணத்தைச் செயல்படுத்து.

16. தாழ்வு மனப்பான்மையை துரத்திவிடு. இல்லையேல் இது உன்னைத் துரத்தும்.

17. நீ வெற்றியாளன். எனவே வேகமாக முன்னேறு.

18. நீ தன்னம்பிக்கை உள்ளவன் எனவே தடைகளை உடைத்திடு.

19. உலக உருண்டையை பள்ளியில் மேசையின் மேல் பார்த்திருப்பாய். அதை உன் கைகளில் கொண்டு வா. எப்படி? உலகம் உன்கையில் – நீ உழைத்தால்/ நினைத்தால்.

20. உழைப்பையும் துன்பத்தையும் விற்பனைப செய்துத வெற்றி மாலை வாங்கியணிந்து வீர நடை செய்ய உன்னை நாளும் தயார்ப்படுத்து.

21. எந்தச் செயலை செய்வதானாலும் திட்டமிட்டு செய். தள்ளிப்போடும் பழக்கத்திலிருந்து தள்ளி நில். வெற்றி உன் செயலில் தெரியும்.

==========திருப்பூர் தங்கவேலு

கர்ம வீரர் மட்டுமல்ல தர்ம வீரருமாவார் இவர்....

1954-ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு நாளன்று முதல்வர் பொறுப்பையேற்கப் புறப்பட்டார் காமராஜ். திருமலைப் பிள்ளை வீதி திமிலோகப்பட்டது. அனைவரிடமிருந்தும் விடைப் பெற்று வெளியே வந்து 2727 என்ற காரில் ஏறினார்.

திடீரென முன்னாலிருந்த காவலர் வண்டியிலிருந்து "சைரன்" என்ற மிகுவொலி எழுந்தது. புறப்பட்ட காரை நிறுத்தச் சொன்னார். முன்னாலிருந்த வண்டியிலிருந்த காவல் துறை அதிகாரியை அழைத்தார். "அது என்னையா சத்தம்?" காமராஜ்.

"ஐயா, இது முதலமைச்சர் செல்லும் போது போகுவரத்தை உஷார்படுத்த எழுப்பப்படும் ஒலி. முன்னால் முதல்வர்கள் பிரகாசம் ஐயா, ஓமந்தாரையா, குமாரசாமிராஜா ஐயா, ராஜாஜி ஐயா எல்லோர் காலத்திலுமிருந்து வருகிற சம்பிரதாயம்" என்றார் காவல்துறை அதிகாரி. "இதோ பாருங்க... இதுக்கு முன்னால இந்த சம்பிரதாயமெல்லாம் இருந்திருக்கலாம்... எனக்கு இதெல்லாம் வேண்டாம்னேன். சத்தம் போடாமப் போங்க" என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்.
...
அடுத்த கோடம்பாக்கம் பெருவீதி - நுங்கம்பாக்கம் பெரு வீதி சந்திப்பில் போக்குவரத்தைச் சீர் செய்து கொண்டிருந்த காவலர் இவர் சென்ற வண்டியை நிறுத்தி பின் இவரது வண்டி செல்ல அனுமதியளித்தார். ஆனால் அவர் காருக்கு முன் நின்ற காவல்துறை மேலதிகாரிகளின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன். ஆனால் காமராஜரோ அந்த நடுத்தெருக் காவாலரின் கடமையாற்றலைக் கண்டு உள்ளம் புளகித்தார்.

காவலரைத் தாண்டி இவரது கார் செல்லும் போதுதான் காவலருக்கு விஷயமே புரிந்தது. நடு நடுங்கிப் போனார். முதல்வர் காரையே நிறுத்திவிட்டோமென என்று பதறிப்போனார். காவல்துறை மேலதிகாரிகளின் சினத்துக்கு ஆளாகி விட்டோமே என கலங்கினார்.

அன்று மாலை காமராஜர் வீடு திருப்பியபோது கலவரத்துடன் வாசலில் காத்து நின்று மன்னிப்புக் கேட்ட காவலரை தட்டிக்கொடுத்த காமராஜ் அவரது கடமை உணர்வை பாரட்டியபோது தான் காவலரின் உள்ளம் சாந்தியுற்றது.

காமராஜ் முதலமைச்சராக இருந்தவரை அவருக்கு பாதுகாப்பாகச் சென்ற காவல்துறை வண்டிகள் ஒலி எழுப்பியதே இல்லை. தன்னை தலைவராக எண்ணிக்கொள்ளாமல் மக்களில் ஒருவராகவே தன்னைப் பாவித்துக் கொண்டார்.....